Tuesday 24 April 2012

கிரீஸ் நாட்டு ஆவணப்படமான டெப்டோக்ரசி (DEBT OCRACY) க்கு ஆனந்த ஜோதி மே 2012 இதழில் நான் எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி....

சாதாரண மனிதர்களுக்கு எளிதில் புரியாத பல விசயங்களுள் ஒன்று பொருளாதாரம்.  நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்று யாரையேனும் கேட்டுப் பாருங்கள்,  என்ன பதில் வருகிறதென்று?  சட்டம், மருத்துவம் போன்று பொருளாதாரமும் சாதாரண மனிதர்களின் அறிவு எல்லைக்கப்பால் இருக்கிறது.  சொல்லப் போனால் மெத்தப் படித்த பலருக்குக் கூட நாட்டுப் பொருளாதாரம் குறித்து கடுகளவு ஞானமும் இல்லை. 

பன்னாட்டு நிறுவனங்களின் நிதி மூலதனம் மூன்றாம் உலக நாடுகளை கடன்கார நாடுகளாக்கிச் சுரண்டுவது கடந்த முப்பது ஆண்டுகளாகத் தீவிரமடைந்துள்ளது.  யுரோ ஜோன் என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாடுகளையும் அது விட்டு வைக்கவில்லை.  இதில் குறிப்பாக கிரீஸ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  கிரிசீன் பொருளாதார வீழ்ச்சி அங்கிருக்கிற எந்த கொழுத்த பணக்கரனையும் பாதிக்கவில்லை.  ஆனால் மக்கள் வாழ்க்கையை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டது. 

அடுத்த வீட்டுக்காரனின் பொருளாதாரத்தில் நாம் தலையிடுவது தேவையற்ற ஒன்று.  ஆனால் நாட்டுப் பொருளாதார த்திற்கும் அதே அணுகுமுறையைக் கையாளலாமா?  நாட்டுப் பொருளாதாரம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதும், தேவைப்பட்டால் அதில் தலையிடுவதும் அவசியமான ஒன்று என்பதை இந்த ஆவணப்படம் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது........

வளர்ந்த நாடுகளுள் ஒன்றான கிரீஸ் இன்றைக்கு ஒரு மூன்றாம் உலக நாட்டைப் போல பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்க்கக் காரணம் என்னவென்று இந்த ஆவணப்படம் விரிவாக அலசுகிறது.......



இந்த ஆவணப்படத்தைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்........

ஆடியன்ஸ் பிலிம் என்று பாராட்டப்படுகின்ற இவ்வாவணப்படம் மக்கள் நன்கொடையாகக் கொடுத்த எட்டாயிரம் யுரோ டாலர்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. Aris Hatzistefanou & Katerina Kitidi ஆகிய இருவரும் இணைந்து எழுதி இயக்கியிருக்கிறார்கள்.  இருவரில் ஆரம்பித்து நாற்பது பேர்கள் இப்படத் தயாரிப்பில் இணைந்துள்ளனர்.  இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட இப்படத்தை இதுவரை பத்து லட்சம் பேர்கள் பார்த்துள்ளனர்.  கிரீஸ் நாட்டு தொலைகாட்சி நிறுவனங்கள் இப்படத்தைக் கண்டு கொள்ளவே இல்லையாம்............  

No comments:

Post a Comment